tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

ஓய்வூதியர் குறை தீர்க்க மாவட்ட அளவில் கூட்டம் நடத்திடுக அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், அக். 16 - ஓய்வூதியர் குறை தீர்க்க மாவட்ட அளவில் கூட்டங் கள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச் சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாயன்று திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் பற்றி மாநிலப் பொதுச்செயலாளர் பா.ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந் தோறும் ஓய்வூதியர் குறை களைவுக் கூட்டம் நடத்தி, ஓய்வூ தியர்களின் நிலுவைக் கோரிக்கைகளின் மீது விரைவு நடவடிக்கை மேற்கொண்டு உரிய இறுதி தீர்வு காண வேண்டும். 2020 பொங்கல் பண்டிகைக்கான போனஸ் தொகையினை அனைவருக்கும் வழங்கிட வேண்டும். சங்கத்தின் பெயரை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் - மாநில மையம் என பதிவு செய்வது, பணி ஓய்வு பெறும் நாளில் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். ஓய்வு பெறுவ தற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் ஒழுங்குபடுத்தி முடிக்க  வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர்  5ஆம் தேதி சென்னை எழிலகம் முன்பு அரைநாள் தர்ணா  போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில்  தொடர் வழிப்பறி: 6 பேர் கைது 

திருப்பூர், அக். 16- அவிநாசி, பெருமாநல்லூர் பகுதிகளில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி  மற்றும்  பெருமாநல் லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி முனையில் தொடர்ந்து நடைபெற்ற வழிப்பறிச் சம்பவங்களில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று காலை அவிநாசி பழங்கரை பகுதியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில்  ஈடு பட்டிருந்தபோது ஏற்கனவே வழிப்பறிக்கு பயன்படுத் தப்பட்டு அடையாளம் காணப்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர்களை காவல்துறையினர் வழி மறித்து பிடித்தனர்.  அவர்களிடம் விசாரித்தபோது பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்தபாஅன்சாரி (26), சந்தன்குமார் (22), சந்தன் குமார் (33) அவர்கள் உடன் தங்கும் இடத்தில் இருந்த நாவல்ஷா (20) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (32), ஆந்திராவை சேர்ந்த அபி (எ) ஸ்ரீபதி சுனில் (25) ஆகிய ஆறு நபர்கள் ஒன்றாக தெக்கலூரில் உள்ள பிரபல பனியன்கம்பெனியில் ஏஜண்டாகவும், அயனிங், டெயிலர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருசக்கர வாக னத்தில் வந்து துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்து  வந்ததாகவும் தெரிய வந்தது. இவர்கள் கொள்ளை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத் திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பீகாரிலிருந்து கொண்டு வந்துள்ளனர்.  இதையடுத்து தனிப்படையினர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், நாட்டு துப்பாக்கிகள்- 2,  தோட்டாக்கள்- 6 மற் றும் வழிப்பறி சொத்துக்களான தங்கசெயின், கைபேசிகள், ஏடிஎம் கார்டு மற்றும் பான்கார்டு ஆகியவற்றைக் கைப் பற்றினர்.