செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

ஆட்சியர் தலையீட்டிற்கு பிறகு வாக்களித்த இளைஞர்

கோவை, ஏப். 18-பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரயில் மூலம் வியாழனன்று காலை கோவைக்கு வந்தார். மதியம் 2 மணிக்கு வாக்களிக்க பீளமேடு பிஎஸ்ஜி தொடக்க பள்ளிக்கு சென்றார். வாக்குச்சாவடியில் ஆதார் அட்டை மற்றும் பூத் சிலிப் ஆகியவற்றை காண்பித்து உள்ளார். தேர்தல்முகவர்கள் ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வாக்களிக்க அனுமதி அளித்துஉள்ளனர். இதனைத் தொடர்ந்து கார்த்திகேயன் விரலில் மை வைக்கப்பட்டு வாக்கு இயந்திரத்தில் உள்ளவேட்பாளர் பட்டனையும் அழுத்தமுயலுகையில் அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த வாக்கை ஏற்க முடியாது எனவாக்கு சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்தகார்த்திகேயன்முகவர்களுடன்வாக்குவாதம்செய்தார். தனதுவாக்கை செலுத்தியே தீருவேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரும் கோவை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளருமான ராசாமணியிடம் இது குறித்து புகார் அளித்தார்.மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் 15 நிமிடங்களுக்குப் பிறகு கார்த்திகேயன் தனது வாக்கை பதிவு செய்தார். 

;