பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம், வடசித்தூர், ஆண்டிபாளையம் பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதனன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
**************
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை, தடாகம் பகுதியில் வீடு, வீடாக நடைபெற்ற இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
**************
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றிய பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை, தடாகம் பகுதியில் வீடு, வீடாக நடைபெற்ற இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
**************
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
**************