tamilnadu

டாப்சிலிப்பில் நாளை முதல் யானை சவாரி தொடக்கம்

பொள்ளாச்சி, ஏப். 11- ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் சனிக்கிழமை முதல் யானை சவாரி துவங்கவுள்ளது.கோவை மாவட்டம்,பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் யானைகள்முகாமில் வளர்ப்பு யானைகளுக்கான 48 நாள் புத்துணர்வு முகாம் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. இதனால் அன்று முதல் யானை சவாரி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவுபெறுவதால், சனிக்கிழமை முதல் டாப்சிலிப்பில் யானை சவாரி தொடங்கும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

;