tamilnadu

img

வரலாறு படைத்த தொழிற்சங்க தலைவர் எஸ்.நாராயணசாமி

சென்னையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து, பின்னர் போக்குவரத்துக் கழகங்கள் உருவானபோது மேற்கு மண்டலத்தில் உருவான சேரன் போக்கு வரத்துக் கழகத்தில் ஓட்டுநர் ஆக பணியாற்றியவர் எஸ்.நாராயணசாமி. சேரன் போக்குவரத்துக் கழகத்தில் அப்போது தொழிலாளர்கள் எந்த உரி மையும் இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டார்கள். உதாரண மாக, பணிநிரந்தரம் செய்வதற்கு கால அளவு இல்லை. நடத்துனர்களுக்கு பேருந்தில் அமர இருக்கை கிடையாது. பணி முடிந்த பின்பு பேருந்து நிலையத் தில் இறங்கி பணிமனைக்கு சென்று வசூலான பணத்தை கட்ட வேண்டுமா னாலும், நடத்துனர் தன் கைக்காசை செலவு செய்து டிக்கெட் எடுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். கிளை யில் அதிகாரிகளை சந்திப்பதற்கு அலு வலகத்திற்கு உள்ளே செல்லும் போது செருப்புகளை வெளியிலேயே கழற்றி விட்டு வெறும் காலுடன் தான் உள்ளே போக வேண்டும். இப்படி கொடுமை களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த அநீதிகளை யாரும் தட்டிக்கேட்க முடியாது. அப்படி யாராவது கேட்டால் அவர்களுக்கு உடனடியாக இடமாற் றம், தற்காலிக பணி நீக்கம் என்ற நிலை யில் தண்டனைகள் மட்டுமல்ல, சில சமயங்களில் அடியாட்களின் தாக்குத லையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுருக்கமாக சொன்னால், அதிகாரிகளின் சாம்ராஜ்யமாக சேரன் போக்குவரத்துக் கழகம் இருந்தது.

மலையை பிழந்த உளி

யாரும் கேள்வி எழுப்ப முடியாது, எழுப்பினால் அவர்களுக்கு என்ன வேண் டுமானாலும் நிகழும் என்ற அச்சுறுத்தல் தலைக்கு மேல் இருந்தது. உதாரணமாக, 1976 ஆம் ஆண்டு உடுமலை பணி மனையில் விசுவநாதன் என்ற அதிமுக தொழிலாளி. சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சக தொழிலா ளர்களுடன் பேசியபடி, அன்று இரவு உறங்க செல்கிறார். அடுத்தநாளே, பத்தி ரிகைகளில் உடுமலை பணிமனையில் விசுவநாதன் என்ற தொழிலாளி டீசலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளி யானது. தொழிலாளர்கள் இந்த கதையை நம்பவில்லை.இச்சுழலில் எஸ்.நாராயண சாமி சங்கத் தலைவர் தேர்தலில் போட்டி யிட முடிவு செய்தார். சக தொழிலா ளர்களின் உதவியோடு களத்தில் இறங்கி னார். கழகத்தின் நிர்வாகம் திகைத்து போனது. எல்லா விதமான சதிகளையும் செய்து நாராயணசாமியை தோற்கடிக்க முயற்சித்தார்கள். இவை அனைத்தையும் மீறி தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றார். விட்டுவிடுவார்களா அதிகாரிகள்?. தங்கள் ஆட்களை பயன்படுத்தி நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்து தேர்தலில் நாரா யணசாமி வெற்றி பெற்றது செல்லாது என தடையாணை வாங்கினார்கள். சங் கம் முடக்கப்பட்டது. 

சிஐடியு உதயம்

அதன் பிறகு சேரன் கழகத்திலி ருந்து ஜீவா போக்குவரத்து கழ கம் பிரிக்கப்பட்டபோது, 51 உறுப்பினர் களோடு 1983இல் சிஐடியு சங்கம் உரு வாக்கப்பட்டது. நாராயணசாமி தலை வராக  கொண்டு உருவான இச்சங்கம் பல் வேறு அடக்குமுறைகளை எதிர் கொண் டும், துரோகத்தை முறியடித்தும் வெற்றி நடை போட்டு வளர்ந்தது. இதன்மூலம் 1986ஆம் ஆண்டில் உறுப்பினர் எண் ணிக்கை 913 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு மாதமும் சிஐடியு செய்தி இதழ் ஆயிர மும், போக்குவரத்து தொழிலாளி இதழ் 1500 தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டன. தோழர் எஸ்.நாராயணசாமியின் சீரிய முயற்சியில் உருவான கூட்டுத்தலைமையும், ஊழியர் பட்டாளமும் இதனை சாத்தியமாக்கின.

வெற்றி போராளிக்கு வீர அஞ்சலி

மேலும், போக்குவரத்து கழகத்தில் மட்டுமல்லாது, தன்னைச் சுற்றியுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள், மலைவாழ் மக் கள், இளைஞர்கள் என அனைத்து பகுதி யிலும் தயக்கமின்றி பணியாற்றினார். சத்தியமங்கலத்தில் முதுபெரும் தோழர் ஏ.எம்.காதருடன் இணைந்து இவர் நடத் திய மக்கள் இயக்கங்கள் ஏராளம். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சங்க காரணங்களுக்காக மறிக் கப்பட்ட போதும் கூட மனம் தளராமல் மக் களுக்காக பாடுபட்ட தோழர்  எஸ்.நாரா யணசாமி 2007 ஜன 8 உயிர் நீத்தார். இவரின் நினைவு தினமான  ஜன.8 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை வெற்றி பெற செய்வதன் மூலம் உண்மை யான அஞ்சலியை தோழருக்கு செலுத்து வோம்.

ப.மாரிமுத்து,
ஸ்தாபக பொதுச்செயலாளர்,
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்,
ஈரோடு. 

;