tamilnadu

img

மத நல்லிணக்கப் பொங்கல் விழா

ஈரோடு, ஜன.18- ஈரோடு,  சூரம்பட்டி பாரதி புரத்தில் மூன்றாம் ஆண்டாக தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் மத நல்லிணக்கப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நலக்குழுவின் தலைவர் கே.எஸ்.இஸாரத்அலி, உதவித் தலைவர் அருட்பணி டி. விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்டுமானச் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.மாதவன் வரவேற்றினார். ஈரோடு  மாவட்ட ஜமாத் அத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா  மௌலவி கே.எஸ்.பைஜுர்  பாக்கவி, பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி.எம்.அபுல் ஹாசன்மாலி,  மதரஸா இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.முகமதுஉதுமான்,  தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  கே.துரைராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார், சிறு பான்மை மக்கள் குழுவின் மாநில  பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் கே. நடராஜன், மாவட்டக்குழு உறுப் பினர் பி.சுந்தரராஜ், கட்டுமான சங்க தலைவர் எஸ்.ஜெயபால் மற்றும் பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். முடிவில், பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர். இந்நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியர் பொங்கல் விழா 

இதேபோல், ஈரோடு வட்டாட் சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் சமத்துவ பொங்கல்  விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு சங்கத்தின் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். பேராசிரியர் மணியன் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர்  வி.பன்னீர் செல்வம், பி.எஸ்.பிரசன்னா, ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.