கோவை, ஜன.23- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் அடுத்த நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட முதல் பிரதியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசுகை யில், கோவை மாவட்டத்தில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் மிக அதிக அளவு உள்ளன. இந்நிலையில் இத்துறைகளின் வளர்ச்சிக்கு வங்கிகளின் சேவை இன்றியமையாதது. கடந்த ஆண்டை காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி ஆற்றல் 5.70 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நமது திட்ட அறிக்கையின் மொத்த நிதி ஆற்றல் ரூ. 20556.34 கோடியாகும். இதில் வேளாண் மற்றும் இணை தொழில்களுக்கு 37.09 சதவிகிதமும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 43.99 சதவீ தமும், இதர தொழில்களுக்கு 18.92 சதவிகிதம் பங்கு பிரிக் கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வங்கிகளின் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட விவசாயம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் தாமாக முன்வந்து கடன் உதவி செய்ய வேண்டும். ஆகவே நபார்டு வங்கியின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு வங்கிக ளுக்கான கடன் திட்டத்தை முன்னோடி வங்கி தயார் செய்யுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.