tamilnadu

img

எந்த கட்டுப்பாட்டிலும் இல்லாத தனியார் பால் நிறுவனங்கள்

அழைத்து பேசி நியாய விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 24 - எந்த கட்டுப்பாட்டிலும் இல் லாத தனியார் பால் விற்பனை நிறு வனங்களையும், பால் உற்பத்தி யாளர்கள், ஆவின் நிறுவனம் ஆகி யோரையும் ஒரு தேதியில் அழைத் துப் பேசி நியாயமான பால் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். திருப்பூர் மாவட்ட விவசாயி கள் குறைதீர்க் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பரமசிவம் கூறியதாவது: விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு அடுத்தபடியாக பொருளாதார உதவி செய்து வரு வது பால் உற்பத்திதான். ஒன்று பட்ட கோவை மாவட்டமாக இருந்தபோது 2.25 லட்சம் முதல் 2.35 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட் டது. இரு மாவட்டங்களாகப் பிரிந்தும், முழு கொள்திறனில் ஆவின் இல்லை. அதேசமயம் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் கொள்முதல் செய்வதும், நினைத்தால் விலையைக் குறைத் துக் கொள்ளவும் செய்கின்றனர். இந்நிலையில் தனியார் பால் விற்பனைக்கு லிட்டருக்கு ரூ.4 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தை அரசு கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள் ளது, ஆனால் தனியார் பால் நிறு வனங்கள் எந்த கட்டுப்பாட்டிலும் இல்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே கூட அழைத்துப் பேச முடியாத நிலையே உள்ளது. தனியார் நிறுவனங்களும் அர சின் நியாயமான விலைக்கு கட் டுப்பட்டு விற்பனை செய்வதற்கு பால் உற்பத்தியாளர், ஆவின், தனியார் நிறுவனங்களை ஒரு தேதியில் அழைத்துப் பேசி விலை நிர்ணயத்தில் தீர்வு காண அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியல் குளறுபடி

தாராபுரம் ஈஸ்வரமூர்த்தி: அம ராவதி பாசன சபைக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறு கிறது. ஆனால் இதற்கான வாக் காளர்கள் பட்டியலில் பெரும் குள றுபடி உள்ளது. இந்த வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும். அமராவதி பாசன சபையில் 1050 ஏக்கருக்கு 450 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் தற்போது 2035 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியலில் உள்ளது. இதனால் பாசனசபைத் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. அதேபோல் உப்பாறு பாசனத்தில் 6,100 ஏக்கரில் 2,500 விவசாயிகள் உள்ளனர். இதில் 12ஆயிரம் வாக்காளர்கள் காண் பிக்கிறது. ஆகவே வாக்காளர் பட் டியலை முறைப்படுத்த வேண் டும். புண்ணியமூர்த்தி: திருப்பூர், மாவட்டம் பல்லடம் வட்டம் கே. அய்யம்பாளையம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான பட்டா பூமியில் உள்ள விவசாய கிணற் றில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொண்டு வந்து எங்களுடைய அனுமதி இல்லா மல் கொட்டியுள்ளது. அவ்வாறு, அனுமதியின்றி கொட்டி சுகாதா ரக்கேடு ஏற்படுத்துவதற்காகவும், அத்துமீறியதற்காகவும் சம்பந் தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கொட்டிய குப்பைகளை நக ராட்சி அப்புறப்படுத்த ஆணை யிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விவசாய சங்கம் சின்னசாமி: ஊத்துக்குளி தாலுகா செங்கப் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்சமயம் புதிதாக பல குடியிருப்புகள் உருவாகி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை சுமார் 6,500 ஆகும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் சுமார் 5 1/2 லட்சம் தண்ணீர் வழங்கப்படு கிறது. தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை. மக்கள் தொகை 9 ஆயிரமானதால் குடி தண்ணீர் இரு மடங்கு வழங்க வேண்டும். தவிர செங்கப்பள்ளி பகுதிக்கு புதிதாக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்க வும் மற்றும் நல்லகவுண்டன் பாளையம் பகுதிக்கு புதிதாக சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைத்து தர வேண்டும். ஈஸ்வரி: திருப்பூர் மாவட்டம் நத்தகாட்டு தோட்டம் அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். எனது கணவர் மயில்சாமி கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி காலமாகிவிட்டார். அவருடைய பெயரில் விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் வாங்க பல்லடம் எஸ்.பி.ஐ வங்கியில் கடன் பெற்று உயிரிழப்பதற்கு முன்பாக கடனை திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் அட மானம் நீக்கப்படாமல் இந்நாள் வரை நிலுவையில் உள்ளது. இதனால் டிராக்டர் ஆர்.சி புக் பெயர் மாற்றம் செய்ய முடியாம லும் டிராக்டர் இன்சூரன்ஸ் கட்ட முடியாமலும் தொடர்ந்து நிலுவை யில் உள்ளது. நாங்கள் பலமுறை இது தொடர்பாக பல்லடம் எஸ்.பி.ஐ வங்கி மேலாளரிடம் மனு கொடுத்தும் ஆவனங்களை ஒப்ப டைத்தும் இதுநாள் வரை நிலுவை யில் உள்ளது.

கல் குவாரியால் பாதிப்பு

தமிழக கட்சி சார்பற்ற விவ சாயிகள் சங்கம்: திருப்பூர் மாவட் டம் தாராபுரம் வட்டம் புங்கல் துறை கிராமம் வலசுபாளையத் தில் கார்த்திகேயன் மெட்டல் என்ற பெயரில் கல்குவாரி நடை பெற்று வருகிறது. அரசு நிர்ண யித்த அளவைவிட அதிக ஆழம் தோண்டிய மாசை ஏற்படுத்தி வருகிறது. 5 கிலோ மீட்டர் சுற்ற ளவில் உள்ள கட்டிடங்கள், வீடு களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. ஆடு, மாடு, கோழி பண்ணைகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவா சக் கோளாறுகள் ஏற்பட்டு பாதிக் கப்பட்டுள்ளனர். இந்த கல் குவாரி கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கல் குவாரியில் இருந்து கிளம்பும் புகையால் ஓடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. கல்லெடுக்கும் கல்குவாரிகள் இருந்து செல்லும் லாரிகள் மிக வேகமாகச் செல்வதி னால் விபத்துகளும் ஏற்படுகிறது.நெல் கொள்முதல் நிலையங்களில் தராசு முறைப்படி இல்லை. இத னால் ஒரு மூட்டைக்கு இரண்டு அல்லது மூன்று கிலோ குறைவான எடை வருகிறது. மொத்தமாக விவ சாயிகள் போடும்போது, பெருத்த சேதம் விவசாயிகளுக்கு ஏற்படும். இதனால் விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எடைமேடை ஒன்றை அமைத்து, முறையாக அதனை பாரமரித்து கணக்கில் கொள்ள வேண்டும்.

 

;