tamilnadu

img

காதி கிராப்ட் கதர் அங்காடியில் பொங்கல் சிறப்பு விற்பனை

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஜன. 10- நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காதி கிராப்ட் கதர் விற்பனை அங்கா டியின் புதுப்பிக்கப்பட்டு, மெருகூட்டப் பட்ட விற்பனை நிலையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் வெள்ளியன்று  துவக்கி வைத்து  ஆய்வு செய்தார் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தாவது,நாமக்கல் பேருந்து நிலையம் பகுதி யில் உள்ள காதி கிராப்ட் கதர் விற்பனை அங்காடியில், பொங்கல் சிறப்பு விற்பனை வெள்ளியன்று துவங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாடிக் கையாளர்கள் நலன் கருதி கதர், பாலியஸ் டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு30 சதவிகி தமும், கம்பளி ரகங்களுக்கு 20 சதவிகிதமும் மத்திய, மாநில  அரசுகளால் சிறப்புத் தள்ளு படிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கதர் வாரியத்தின் சொந்த தயா ரிப்புகளான, தரமான குளியல் மற்றும் சலவை சோப்புகள், அக்மார்க் தேன், தோல் பொருட்கள், ஜவ்வாது, ஊது பத்தி, கம்யூட் டர் சாம்பிராணி, சந்தன மாலை, மெழுகு வர்த்திகள் உள்ளிட்ட பொருட்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. இக்கதர் அங்காடி வாடிக்கையாளர் களை கவரும் வகையில் குளிரூட்டப்பட்ட வசதி, வாடிக்கையாளர் வாங்கிய கதர் ரகங்க ளுக்கு பணமாக செலுத்தாமல் வங்கி பண அட்டையின் மூலம் செலுத்த ஸ்வைபிங் மிசின் வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ் வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இவ்விழாவில் திருச்சி கதர் கிராமத் தொழிலாளர் மண்டலத்துணை இயக்கு நர், நா.மணிவாசகன், கரூர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர், கோ.பால குமாரன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலு வலர்கள் கி.மோகன்ராஜ்(செய்தி) உட்பட கதர் வாரியப்பணியாளர்கள் கலந்து கொண் டனர்.

;