பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் உள்ள பிஏபி கால்வாய்க்குள் நள்ளிரவில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பலியாகி உள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (45)இவரது மனைவி சித்ரா,மகள் பூஜா ,அண்ணன் மனைவி லதா, இவரது மகள் தாரணி மற்றும் பிரகாஷின் அக்கா சுமதி ஆகியோர் நேற்று கோவையில் இருந்து காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர், நேற்று இரவு 9 மணிக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கோவைக்கு திரும்பியுள்ளனர், பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேடு பகுதியில் வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பிஏபி கால்வாய்கள் கவிழ்ந்து மூழ்கியது,
தகவல் அறிந்த கோமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது, பின்னர் இன்று அதிகாலை கிரேன் வரவழைக்கப்பட்டு தீயணைப்புத் துறை உதவியுடன் காரை மீட்டனர். அப்போது காரில் இருந்த அனைவரும் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர்.
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.