tamilnadu

ஓமலூர் மற்றும் ஏற்காடு முக்கிய செய்திகள்

ஓமலூர் பாத்திமா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஓமலூர்,ஜன.31- ஓமலூர் பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவி யல் கண்காட்சி நடைபெற்றது.  சேலம் மாவட்டம், ஓமலூரில் பாத்திமா மெட்ரிகு லேசன் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை சுமார்500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிக ளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை படிக்கும் மாண வர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சி படுத்தினர். இதில், கலந்துகொண்ட மாணவர்கள் சுற்று சூழல் மாசு அடைவது குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது குறித்தும், குறைவான செலவினத்தில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் உபகாரம், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.  குறிப்பாக, வாக்களிக்கும் இயந்திரம், மனித சிறுநீரகத் தின் செயல்பாடுகள், ஹெலிகாப்டர் மற்றும் அடர்ந்த காடுக ளில் வசிக்கும் விளகினங்கள் ஆகியவற்றை காட்சிபடுத் தியது அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மார்கிரேட் மற்றும் பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை பார்த்து சென்றனர். இதைத்தொடர்ந்து சிறந்த படைப்பாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட் டது.

ஒலி பெருக்கியின் பயன்பாட்டு நேரத்தை குறைத்திடுக

ஊராட்சி மன்ற தலைவர் காவல் துறைக்கு மனு

 ஏற்காடு, ஜன. 31- ஏற்காட்டில், ஒலிப்பெருக்கியின் பயன்பாட்டு நேரத்தை குறைக்க வேண்டும் என ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி காவல் துறையினரிடம் மனு அளித்தார்.  இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் தெரிவித்திருப் பதாவது, சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சியில் கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சி களின் போது ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்ப படுகிறது. இதனால், கிராம மாணவர்கள் பொது தேர் வுக்கோ, அரசின் வேலைவாய்ப்பு தேர்விற்கோ படிக்க முடி யாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே,பிப். 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ள வும், மாணவர்களின் நலன் கருதி மற்ற நேரங்களில் ஒலிபெ ருக்கி பயன்படுத்த தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஏற்காடு படகு இல்ல ஏரியில் படர்ந்துள்ள ஆகா யத்தாரைகள், அங்குள்ள நீரேற்று நிலையத்தின் மோட்டர் களில் சிக்கி, மோட்டர்கள் பழுதாகி வருவதால், பொதுமக்க ளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, படகு இல்ல ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை களை அகற்ற வேண்டும் என்றும் படகு இல்ல மேலாள ரிடம் மனு ஒன்றை அளித்தார்.

 

தார்ச்சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி

தருமபுரி, ஜன. 31- தருமபுரி அருகே அண்ணாநகர் கிராமத்திற்கு தார்சாலை வசதி செய்துதரக் கோரி கோரிக்கை விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அண்ணாநகர் மற் றும் நேதாஜி நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகு தியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். ஏரியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் அண்ணா நகர் மற்றும் நேதாஜி நகர் ஆகிய கிராமங் கள் உள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதிக்கு தார்ச் சாலை வசதி செய்து தரப்படவில்லை. இப்பகுதியில் தார்சாலை வசதி இல்லாததால், பொது மக்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் தார்சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமிக்கு திருமணம் - மூவர் கைது

தருமபுரி, ஜன. 31- தருமபுரி அருகே பென்னாகரத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற தையடுத்து கணவர் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னகரம் அருகே உள்ள கொல்லப்பட்டி புதுகரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பழனி, முனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந் தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந் தாண்டு ஏப்.10 ஆம் தேதியன்று தனது மூத்த மகளை அதேபகுதியை சேர்ந்த முனியப் பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத் துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அச்சிறுமி குழந் தைகள் பாதுகாப்புக்கு (சைல்டு லைன்) அழைப்பு விடுத்து தனக்கு கட்டாய திரு மணம் செய்து வைத்து விட்டதாக கூறி யுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில், பென்னாகரம் மகளிர் காவல் துறையினர், சிறுமியின் கணவர் முனியப்பன், தாய்மாமன் பெருமாள், முனி யப்பனின் தந்தை ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

வீடு இல்லாதவர்களுக்கு மனைபட்டா வழங்குக 

விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.31- வீடற்ற மக்களுக்கு குடிமனைபட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய பேரவை கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் ஒன்றிய தலைவர் பி.ரவி தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், ஒன் றியசெயலாளர் தீ.மாரியப்பன்,பொரு ளாளர் என்.மனோகரன், மாவட்டகுழு உறுப்பினர் கே.கோவிந்தசாமி ஆகியோர் பேரவையின் நோக்கங்களை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் என்.கந்தசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செய லாளர் கே.சுசிலா ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இப்பேரவையில், தருமபுரி ஒன்றியத் தில் நிலமற்ற விவசாய தொழிலாளர் களுக்கு நிலம் வழங்க வேண்டும். வீட்டு மனையற்ற மக்களுக்கு குடிமனைபட்டா வழங்க வேண்டும்.  ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை, தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து விவ சாய தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதி யமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். குண் டல்பட்டி மற்றும் நத்தம் கிராமங்களில் சிமென்ட் சாலை, மயானம் மற்றும் மயான பாதை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரவை கூட்டத் தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட் டனர். இதில் ஒன்றிய தலைவராக பி.ரவி, ஒன்றிய செயலாளராக தீ.மாரியப்பன், பொருளாளராக என்.மனோகரன், துணைத் தலைவராக கே.கோவிந்தசாமி, துணைச் செயலாளராக கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர்கொண்ட ஒன்றியகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வாலிபர்கள்  நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார்

இளம்பிள்ளை, ஜன. 31- இளம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வாலி பர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு, 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின் றனர். இந்நிலையில், வெள்ளியன்று காலை வழக்கம்போல்  மாணவிகள்  பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாணவிகளை பின்தொடர்ந்து வந்த வாலி பர்கள் சிலர் பள்ளி நுழைவு வாயில் முன்பு இடையூறு செய்துள்ளனர். இதனை கண்ட  பெற்றோர்கள் அந்த வாலிபர்களை பிடித்த னர்.  இதனையடுத்து,  மகுடஞ்சாவடி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் வருவதற்கு காலதாமதம் ஆன தால் அந்த வாலிபர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் வந்த காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன்பின்னர் து பெற்றோர்கள் மகுடஞ் சாவடி காவல் நிலையம் சென்று புகார் செய்த னர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதா வது, எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வரும் பொழுதும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழி யில் சில வாலிபர்கள் இடையூறு செய்து வரு கின்றனர். இதனால், எங்கள் குழந்தைகள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்மநபர் கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள்  பெண் குழந்தைகள் படிப்பு பாதிக்காத வகை யில் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளி நுழைவாயிலில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தி  காலை மற்றும் மாலை நேரங்க ளில்  காவலர்கள்  ரோந்து பணிகளை மேற் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்ட னர்.

;