திருப்பூர், ஆக. 5– புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழைகளின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் சூழ்ச்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 15வேலம்பாளை யம் நகரப் பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதன்படி திலகர் நகர், அ.புதூர் மற்றும் ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் மற்றும் வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் கண் டித்து உரையாற்றினர். மூன்று பகுதிகளிலும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த பிரச்சாரக் கூட்டங்களுடன் பொது மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கமும் நடைபெற்றது.