பொன்னமராவதி, ஜன.22- புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே குழிபிறை இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், இந்தியப் பள்ளிகளில் விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான 14 வய துக்குட்பட்ட மாணவிகளுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் கலந்து கொண்ட னர். இதில் இப்பள்ளியைச் சேர்ந்த அட்சயா என்ற மாணவி, தமிழக அணிக்காக விளை யாடி தங்கப் பதக்கமு, 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சௌந்தியா என்ற வெண்கலப் பதக்கமும், 14 வயதுக்குட்ட பிரிவில் அட்சயா, மகாலெட்சுமி மற்றும் அடைக்கம்மை ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜய லெட்சுமி பாராட்டினார். தலைமையாசிரியர் கருப்பையா, உடற்கல்வி ஆசிரியர் பொ. ரமேஷ் உடனிருந்தனர்.