tamilnadu

img

மோடி என்றால் வளர்ச்சியல்ல, அழிவின் ஆரம்பம் கே.பாலகிருஷ்ணன் சாடல்

கோவை, ஜன. 9– மோடி என்றால் வளர்ச்சி என்று சொன்னவர்கள், இப்போது மோடி என்றால் அழிவின் ஆரம்பம் என் பதை புரிந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தாக சின்னியம்பாளையம் தியா கிகள் நினைவு தின பொதுக்கூட் டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றி னார். கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 74 ஆம் ஆண்டு நினை வுதினம் புதனன்று கோவையில் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்  கே.சுப்பராயன் எம்.பி,  மார்க்சிஸ்ட்  கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகி யோர் உரையாற்றினர். அப்பொதுக்கூட்டத்தில், கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் கான போராட்டத்தில் இன்னுயிரை தந்த சின்னியம்பாளையம் தியாகி கள் நினைவு தினத்தை எழுச்சி யோடு இன்று அனுசரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இந்நாளில் நாடு முழுவதும் அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றுள் ளது. தொழிற்சங்க உரிமை பறிப்பு,   குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகிய வற்றிற்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து  25 கோடி தொழிலாளர் கள் இப்போராட்டத்தில் பங்கேற்ற னர். தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர், மக்கள் விரோத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு கைதா கினர். கடுமையான வேலை யிண்மை, வெங்காய விலை உயர்வு,  விவசாயிகளின் தற்கொலை போன்ற மக்கள் விரோத திட்டங் களினால் மோசமான சீரழிவை நோக்கி நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.   இந்த நெருக்கடிக்கு தீர்வு காண் பதற்குப் பதிலாக மத்திய அரசானது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும், மேலும் சலுகைகளை வாரி வழங்குகிறது. இன்று இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடை பெற்று வருகிற நிலையிலும் கூட, பெல் நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என்று மத்திய அமைச் சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. விமான நிலையம்,  ரயில்நிலையம், ரயில் என அனைத்து பொதுத்துறை நிறுவ னங்களையும் தாரை வார்க்கிற அரசாக மோடி அரசு இருக்கிறது. இந்த நெருக்கடியையெல்லாம் திசை திருப்புவதற்காகத்தான் மக் களை பிரிக்கும் சட்டங்களை நிறை வேற்றுகிறார்கள். ஆனால் அதை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அதை இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் நிரூபித்தும் உள்ளனர்.  பாஜக கூட்டணியாக உள்ள பல மாநில அரசுகள் குடியுரிமை சட் டத்தை நடைமுறைப்படுத்த மாட் டோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆட்சி  மாநிலத்தின் உரிமைகளை பறிக் கிறபோது, எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத ஆட்சியாக அதி முக அரசு உள்ளது. தமிழக அரசா னது, கேரள மாநில அரசை போல  குடியுரிமை சட்டத்தை நடை முறைப்படுத்த மாட்டோம், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத் தில் நடைபெறாது என சட்டமன் றத்தில் தீர்மானம் இயற்ற வேண் டும். இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை பாது காக்கவும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மையை பாதுகாக்கவும், எந்த லட்சியத்திற்காக சின்னியம் பாளையம் தியாகிகள் தங்களது உயிர்களை தியாகம் செய்தார்களே,  அந்த லட்சியம் நிறைவேறும் வரை யில் ஓய்வின்றி தொழிலாளி வர்க் கம் போராடும் என்கிற உறுதியை ஏற்கிற நாளாக இந்நாள் அமையும் என்றார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சின்னியம்பாளையம் தியாகிகள் குடும்பத்தினருக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலை வர்கள் புத்தாடைகளை வழங்கி கௌரவித்தனர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.

;