tamilnadu

img

பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு பொருட்களை தயாரிப்பது குற்றம்

தருமபுரி, அக்.16- பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு பொருட்களை தயாரிப்பது குற்றம்  என தருமபுரி மாவட்ட உணவுப்  பாதுகாப்புத்துறை அலுவலர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். உணவுப்பாதுகாப்பு துறை  சார்பில், தீபாவளி பண்டிகையை யொட்டி இனிப்பு, காரம் வகை தயா ரிப்பாளர்கள்  மற்றும் விற்பனையாளர் களுக்கான விழிப்புணர்வு கூட்டம் புதனன்று தருமபுரி ராமாபோடிங் ஹோட்டல் ஹாலில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு  சுஜாதா தலைமை வகித்தார். ஒன்றிய  உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்த கோபால் வரவேற்றார். ஓட்டல், பேக்கரி சங்க செயலாளர் வேணு கோபால், உணவுப்பாதுகாப்பு அலுவ லர்கள் சி.கந்தசாமி, ராஜசேகரன், அனைத்து வணிகர் சங்க தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.  இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா பேசுகையில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் இல்லாமல் உணவுப்பொருட்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். தற்காலிக  கடைகள் மற்றும் மண்டபத்திலோ, வீட்டிலோ விற்பனைக்காக தயா ரிக்கும் உணவு பொருட்களுக்கும் அவசியம் உணவுப்பாதுகாப்பு  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  மேலும், உணவுப்பொருட்கள்  தயாரிக்கும் இடம் பூச்சி அண்டாத வாறு சுத்தமாக இருக்க வேண்டும். உணவுக்கூடத்தில் பணியாற்றும்  பணியாளர்கள் தலையுறை, கை யுறை கட்டாயமாக அணிந்து இருக்க வேண்டும். பணியாளர்கள் வெற்றிலை,புகையிலை, பீடி,சிக ரெட் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. உணவுப்பொருட்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். உணவுப்பொருட் கள் தயாரிக்கப்பட்ட தேதி, காலா வதியாகும் தேதி மற்றும் தயாரிப்பு முகவர் நுகர்வோர் தொடர்பு அலை பேசி எண் அச்சிட்டிருக்க வேண்டும்.  மேலும் இனிப்பு பொருட்கள் செய்யும்போது செயற்கை நிறமிகள்  அனுமதிக்கப்பட்ட அளவே பயன் படுத்த வேண்டும். கார உணவு வகை களில் கண்டிப்பாக எந்த செயற்கை நிறமியும் பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள், அச்சிடப்பட்ட பழைய செய்தி தாள்களில் பொட்டலமிடுதல் தவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து  இனிப்பு, காரம்  தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப்பாதுகாப்பு விதிமுறைகள், அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இனிப்பு, காரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த கண்காட்சியும் வைக் கப்பட்டிருந்தது.