tamilnadu

கோவை, ஈரோடு முக்கிய செய்திகள்

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தபால்துறை சார்பில் கண்காட்சி
கோவை, செப்.4- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செப். 5,6,7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக டெக்னோ பார்க் அரங் கில் தபால் தலை கண்காட்சி மற்றும் பள்ளி மாண வர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தபால்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுதில் கோபால் ஜாக்ரே தெரிவித்தார். இது குறித்து கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி “சாந்திபெக்ஸ்” 2019 என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா, ஓவிய போட்டி, கடிதம் எழுதுதல், புதிர் விடுவித்தல், தபால் பட்டறை உள்ளிட்ட பல் வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்படும். மேலும், இலவச அனுமதியுடன், காலை 10 மணி முதல் மாலை 7 வரை இந்த கண்காட்சி நடைபெறும். இன்றைய தலைமுறையினர் தபால் துறை மற்றும் அதன் செயல்பாடுகள் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.
 

ஈமு கோழி நிறுவன பொருட்கள் செப். 17 ஆம் தேதி ஏலம்
ஈரோடு, செப்.4- ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த ஈமு கோழி நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் வரும் செம் டம்பர் 17 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து ஈடுரோடு மாவட்ட வருவாய் அலு வலர் எஸ்.கவிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், விஜயமங்கலம் ராஜராஜேஸ்வரி பவுல்டரி, பெருந்துறை ராஜராஜேஸ்வரி பவுல்டரி, பெருந்துறை ஜி.ஒன். ஈமு பார்ம்ஸ், கோவை குயின் ஈமு பாம்ஸ், பெருந்துறை குயின் ஈமு பார்ம்ஸ், நாமக்கல் கொங்குநாடு ஈமு பவுல்டரி பார்ம்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறைகேடு புகாரால் இடைமுடக்கம் செய்யப்பட்டது. அவற்றின் சொத்துக்கள் கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்து ஏலம் விடப்படுகிறது. அதன்படி அந்த நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துக்கள் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு http://www.erode.tn.nic.in  என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட் டுள்ளது. அதில் இருந்து நிபந்தனை மற்றும் விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அசையா சொத்துக்கள், நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம், இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் என டி.டி.யாக Competent Authority and District Revenue Officer, Erode என்ற பெயரில் பெற வேண்டும். இதனை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சமர்ப்பித்து ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;