tamilnadu

img

முழுமையான தயாரிப்புகள் இல்லாமல் குளறுபடிகளுடன் முதல் கட்ட தேர்தல்!

குறை களைந்து இரண்டாம் கட்ட தேர்தல் நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 27 – திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு குளறுபடிகளுடன் நடத்தப்பட்டுள்ளது, இந்த குறை களைக் களைந்து இரண்டாம் கட்டத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் மாநில தேர்தல் ஆணை யர் மற்றும் மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலருக்கு வியாழ னன்று இரவு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற திருப்பூர், பல்லடம் ஊரகப் பகுதி களில் வாக்காளர்களுக்கு முன் கூட்டியே வழங்கி இருக்க வேண் டிய பூத் சிலிப் ஒரு பகுதி கொடுக் கப்படாமல் விடுபட்டிருந்ததாக புகார்கள் வந்துள்ளன. அதேபோல் துணை வாக்கா ளர்  பட்டியல் 26ஆம் தேதி காலை யில் இருந்து வட்டார தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் வட் ்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரி யபோதும், வேட்பாளர்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடித்த னர். அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை போராடிப் பெற வேண்டிய கட்டாய நிலை வேட்பாளர்களுக்கு ஏற்பட்டது. சட்ட விதிமுறைகளை கண்டு கொள்ளாமல், மேலிருந்து உத்த ரவு வந்தால்தான் கொடுக்க முடி யும் என்று தேர்தல் அதிகாரி கள் பல இடங்களில் கூறியிருக் கின்றனர்.

அத்துடன் வாக்குச்சாவடி களுக்கு முன்பாக எந்த பொறுப்பு, எந்த வார்டு, போட்டியிடும் வேட் பாளர்கள், அவர்களது சின்னங் கள் உள்ளிட்ட பட்டியல் ஒட்டப் பட்டிருக்க வேண்டும். ஊத்துக் குளி ஒன்றியம் உள்ளிட்ட பகுதி களில் இந்த பட்டியல் முறையாக ஒட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி களில் அந்த பட்டியல் ஒட்டப்பட வில்லை. அத்துடன் வேட்பாளர் கள் பெயருடன், சின்னங்களை அச்சிடாமல், அந்த சின்னத்தின் பெயரை எழுத்தால் எழுதியிருந்த னர். எழுதப்படிக்கத் தெரியாத வாக்காளர்கள் இதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும். எனவே சின்னங்கள் அந்தந்த பட்டியல் களில் வாக்குப்பதிவு நடைபெறு வதற்கு முன்பாக இரவே ஒட்டப் பட வேண்டும். இதுபோன்ற பல்வேறு குறை கள், புகார்கள் தெரிவிக்கவும் மற் றும் தகவல்கள் பெறுவதற்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி களை அலைபேசிகளில் தொடர்பு கொண்டால், உரிய மரியாதை கொடுத்து பதில் அளிப்பதில்லை. பல சமயம் அலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விடுகிறது. குளறுபடிகள் இல்லாமல், நேர்மை யாக வெளிப்படைத் தன்மையு டன், சட்ட விதிமுறைப்படி தேர் தல் நடத்தப்பட வேண்டும். ஆனால்,முதல் கட்டத் தேர்த லில் இது போன்ற குளறுபடிகள் களையப்படவில்லை. எனவே மாநிலத் தேர்தல் ஆணையம் தலை யிட்டு திருப்பூர் மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறும் ஆறு ஊராட்சி ஒன்றியப்பகுதிக ளில்அனைத்து முன்னேற்பா டுகளையும் முறையாக நிறை வேற்றி, நேர்மையாகவும், வெளிப் படையாகவும் சுதந்திரமான தேர் தல் நடைபெறுவதை உறுதிப் படுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார் ்பில் கேட்டுக் கொள்கிறோம் என செ.முத்துக்கண்ணன் கூறியிருக் கிறார்.

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரிக்கை

முதல் கட்டத் தேர்தல் குளறுபடிகள் களையப்படாததால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் மாநிலத் தேர் தல் ஆணையருக்கு வெள்ளியன்று இரவு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் கூறியிருப் பதாவது: நேற்று (வியாழக்கிழமை) இரவு அவசர மனுவாக அனுப்பி இருந்ததோம், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தேர்தலை நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை நடத்தி குறைப்பாடுகளை களைந்திட வேண்டுகி றோம்.

;