tamilnadu

img

படகு போட்டியில் அசத்திய சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்,ஜன.17- கடந்த மாதம் பள்ளிகளுக்கு அரை யாண்டு விடுமுறை, அதனையொட்டி உள் ளாட்சித் தேர்தல் விடுமுறை, தற்போது பொங்கல் விடுமுறை என தொடர்ந்து விடு முறை வந்ததால் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது.   பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்ப டுத்தும் வகையிலும், பயணிகளை ஊக்கு விக்கும் வகையிலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக மேலாளர் அமுத வள்ளி பிச்சாவரத்தில் பொங்கல் தினத்தில் படகு சவாரி செய்ய வரும் வெளியூர் பயணி களுக்கு இடையே துடுப்பு படகு போட்டி நடத்த உத்தரவிட்டார். அதன்படி துடுப்பு படகு போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பிச்சா வரம் கிளை மேலாளர் தினேஷ்குமார் கொடி யசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்தி ருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு படகிலும் 2 பேர் அமர்ந்து துடுப்பு போட்டனர்.  இதில் சென்னை கிண்டியை சேர்ந்த ஹரீஷ், ஞானம் ஆகியோர் முதல் இடத்தை  பிடித்தனர். இவர்களுக்கு ரூ. 3 ஆயிரத்திற்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டது. திருவா ரூரை சேர்ந்த அஜித்குமார், பாலாஜி ஆகி யோர் 2-வது இடத்தை பிடித்தார்கள். இவர்க ளுக்கு இரண்டாயிரத்திற்கான பரிசுக் கூப் பனை வழங்கினர். மூன்றாவது இடம் பிடித்த  கோவையை சேர்ந்த ஷாஜகான், இம்ரான் கான் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்  கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிச் கழக ஓட்டலில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பரிசுக் கூப்பன் வழங்கப் பட்டது.  இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும்  வரவேற்றனர்.

;