tamilnadu

ஈரோடு மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

தருமபுரி: சாலை விபத்தில் 167பேர் பலி

தருமபுரி, ஜன. 2- தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளால் 2019 ஆம் ஆண்டு விபத்துகளின் எண் ணிக்கை குறைந்துள்ளது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு  370 சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப் புணா்வு பிரச்சாரக் கூட்டங்களும், பள்ளிக ளில் 170 விழிப்புணா்வு வார விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 1,083 விபத்துகள், கொடுங்காயம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது  கடந்த 2018-ஆம் ஆண்டைக்காட்டிலும் 14 சதவிகிதம் குறைவாகும். இதேபோல,  தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு 195 சாலை விபத்து வழக்குகளில், 204 போ் உயிரிழந்துள்ளனா். 2019-ஆம் ஆண்டில், 153 சாலை விபத்துகளில் 167 போ் உயிரிழந்துள்ளனா். இது 2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் 21 சதவிகிதம் குறை வாகும். இதேபோல, 2018 ஆம் ஆண் டில் சொத்து சம்பந்தமான திருட்டு மற்றும் இதர குற்றங்களில், 252 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 209 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.  மேலும் 2019ஆம் ஆண்டு 160 வழக் குகள் பதிவு செய்யப்பட்டு, அதில், 133  வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பெரிய அளவிலான குற்ற வழக்குகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு 33 வழக்குகள் பதிவாயின. 2019 ஆம் ஆண்டு குறைந்து  18 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதிலும், 17 வழக்குகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. குற்றச்சம்பவங்களைத்  தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டத் தின் பல முக்கிய பகுதிகளில் இதுவரை 1,067 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக் கப்பட்டுள்ளன.  மேலும், 2019 ஆம் ஆண்டு 12 கொலை, 15 போக்சோ மற்றும் ஒரு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டம் மற்றும் ஒருவா் மீது, தடுப்புக் காவல் சட் டத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதேபோல், தமிழகக் காவல் துறை சார்பில், பெண்கள் மற்றும் முதி யோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்  நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட காவலன் செயலியை தருமபுரி மாவட் டத்தில் இதுவரையில் 10 ஆயிரம்  போ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவ தாக தெரிவித்தார்.

அரசு தலைமை மருத்துவமனையில் தங்கும் சிறப்பு விடுதி

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு, ஜன. 2- ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருகின்ற வர்களுக்கு தங்கும் சிறப்பு விடுதியினை நடத்துவதற்கு தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஈரோடு  அரசு தலைமை பொது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடன் வருகின்றவர்களுக்கு தங்கும் சிறப்பு  விடுதியினை பணபயன் ஏதுமின்றி நடத்துவதற்காக அரசு சார்பில்லா தொண்டு நிறுவனங்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஆர்வ முள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களது விருப்பத்தினை ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி, ஈரோடு என்ற முகவ ரிக்கு வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதிக்குள் தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இதில் தொண்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் விபரங்கள், இதுவரை சமூக பணியில் ஈடுபட்டுள்ள முன் அனுபவம் மற்றும் சேவை விபரங்கள் ஆகியவற்றை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். தொண்டு நிறுவ னம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ஈரோடு மாநக ராட்சி ஆணையாளர் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப் பந்தம் ஏற்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவிப் கப்பட்டுள்ளது.

ஈரோடு நகர வியாபாரக்குழு அமைப்பதற்கான தேர்தல்

ஈரோடு, ஜன. 2- ஈரோடு மாநாகரட்சி பகுதிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளின் பிரிதிநிதிகளை தேர்தெடுக்க ஜனவரி 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தெரி வித்துள்ளதாவது, ஈரோடு மாநகராட்சி பகுதியில், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஈரோடு மாநக ராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ் வாதாரம் பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தினை ஒழுங்குப்படுத்துதல் போன்ற திட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஈரோடு நகர வியாபாரக்குழு அமைத்திட சாலையோர வியாபாரிகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2020 ஜனவரி மாதம் 31 ஆம் நாள் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி 21 ஆம் தேதியன்று துவங்குகிறது. இதனை தொடர்ந்து ஜன.22 ல் வேட்பு  மனு பெறுதல், ஜன.27 ல் வேட்புமனு தாக்கல் செய்வ தற்கான இறுதி நாள், ஜன. 28 ல் வேட்பு மனுக்களை ஆய்வு  செய்தல், ஜன. 29ல் மனுக்களை திரும்பப் பெறுதல், ஜன. 31 ல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. மேலும் அதே நாளில் மாலை 4 மணியளவில் மாநகராட்சி மைய அலுவல கத்தில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளதாக ஈரோடு மாநகராட்சி அறிவித்துள்ளது.

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு, ஜன. 2- பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக  பெரிய அணையாக உள்ள பவானிசாகர் அணை 2019 ஆம் ஆண்டில் பெய்த தென்  மேற்குபருவ மழையால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. இந்நிலையில் புத னன்று இரவு அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டது. பவானிசாகர் அணைக்கு வியாழனன்று  காலை 8 மணி முதல் வினாடிக்கு 1998 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. இதனால் பவானி ஆற்றுக்கு 3 ஆயி ரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரை யோர பகுதிமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

;