tamilnadu

img

டெங்கு விழிப்புணர்வு முகாம்

அவிநாசி, அக். 14- அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் திங்களன்று நடைபெற்றது. அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு முகாம் பேரூராட்சி சார்பில் நடைபெற்றது. இம்முகாமில் தலா மூன்று கொசு ஒழிப்பு பணியாளர்கள், இரண்டு சுகாதார செவிலியர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவர்கள் கொண்ட 28 குழுக்கள் பிரிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 10 வார்டுகளில் காய்ச்ச லில் பாதிக்கப்பட்டோர் விபரங்களை கண்டறியும் பணியி லும் இக்குழுவினர் ஈடுபட்டனர். 6 பிரிவுகளாக முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  இதில் பொது சுகாதாரப் துணை இயக்குனர் ஜெயந்தி, அவிநாசி பேரூராட்சி செயலர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார மருத் துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள், சுகா தார செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.