tamilnadu

கோவை, நீலகிரி முக்கிய செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை, ஜூலை 30- சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப் படும் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  புத்த, சமண, சீக்கிய, இசுலாமிய மற்றும் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட தனி யார் கல்வி நிறுவனங்களில் முதல் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல்  ஆராய்ச்சி படிப்பு வரை ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரி யர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை, பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை மேற் படிப்பு உதவித் தொகையும், தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படை யில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனைப்பெற www.scholarships.gov.in என்ற  இணையதளத்தில் 31.10.2019க்குள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  மேலும், கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்திலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர் முகாம்

உதகை, ஜூலை 30- தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரின் கடிதத்தின்படி கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையும், உதகை வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் பிரதி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழ மையும், குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நான் காவது செவ்வாய்கிழமையும் குறை தீர் கூட்டம் நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சந்தன மரக்கடத்திய இருவர்  கைது

கோவை, ஜூலை 30- கோவை மாநகரில் சந்தன மரம் வெட்டிக் கடத்தும்  முயற்சிகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களில் இரு வரைக் குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் திங்களன்று செய்தனர்.  கோவை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள முரு கன் பஞ்சாலைக் குடியிருப்பு வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட் டது. பந்தய சாலை பகுதியிலும் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில், தடாகம் சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின்போது, வடவள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் சந்தன மரங்கள் மற்றும் அதனை வெட்டப் பயன்படுத்திய அரிவாள், கத்தி, ரம்பம் ஆகியவை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாழப்பாடி புழுதிக் குட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் வல்லரசு ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சந்தன மர கடத்தலில் தொடர்புடைய மீதமுள்ள நபர்களை  தேடி வரு கின்றனர்.