tamilnadu

img

மின்வாரியத்தில் அன்றாட பணிகளில் ஆளும்கட்சியின் தலையீடு

கோவை, ஜூன் 30– மின்வாரிய பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட அன்றாட பணிகளில் நடை பெறும் ஆளும்கட்சியின் அரசி யல் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என சிஐடியு மின் ஊழி யர் மாநாட்டில் கண்டன தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகர் கிளையின் 5 ஆவது மாநாடு காட்டூர் மில் தொழிலாளர் சங்க கூட்டரங்கில் கே.இஸ்மாயில் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. வி.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் மையக்கோட்ட செய லாளர் சாதிக்பாட்சா வரவேற் புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு இணை செயலாளர் எம்.பாலகுமார் பேசி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் என்.சின்ன சாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். 

தீர்மானங்கள்

மின் வாரியத்தில் காலியாக வுள்ள கள உதவியாளர் பதவி களில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்களை தேர்வு செய்து நிரப்பிட வேண்டும். ஒப் பந்த ஊழியர்களுக்கு வாரியம் அறி வித்தபடி நாள்ஒன்றுக்கு ரூ.380 ஊதியம் வழங்கிட வேண்டும். மக் கள்சேவைக்கு முக்கியத்துவம் அளித்து பிரிவு அலுவலகங்க ளுக்கு தளவாடப்பொருட்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் வாகன வசதியை செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கிரேன்லாரி இருப்பதை உறுதிப்படுத்த வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள்மாநாட்டில் நிறைவேற் றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் 

இதைத் தொடர்ந்து மாநாட் டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக வி.மதுசூதனன், செயலாளராக ஆர்.செபாஸ்டி யன், பொருளாளராக டி.மணி கண்டன் உள்ளிட்ட 23 பேர் நிர்வாகக்குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன் சிறப்புரையாற்றினார். முடிவில் ஜே.கனகமுத்து நன்றி கூறினார்.   

அசோக் குடும்ப பாதுகாப்பு நிதி
இம்மாநாட்டில் சாதி வெறி யர்களால் நெல்லையில் படு கொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க இளம் தோழர் அசோக்கின் குடும்ப பாதுகாப்பு நிதியாக மாநாட்டு பிரதிநிதிகள் 5 ஆயி ரம் ரூபாயை சிஐடியு மாவட்ட  செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி யிடம் வழங்கினர்.