பென்னாகரம், ஜூலை 21- பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் சிஐடியு ஆட்டோ சங்க துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் சிஐடியு சார்பில் ஆட்டோ சங்கர் துவக்க விழா நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த விழாவிற்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எம். எம்.கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை தலை வர் சி.ராஜி் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சிஐடியு ஆட்டோ சங்கர் தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் எம்.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.பி.முருகன், பென்னாகரம் நகரசெயலாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.