tamilnadu

img

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்க

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.17- ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.பெரியசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில் ஆன்லைன் வர்த்த கத்தை தடை செய்ய வேண்டும். உத்தரவாதம் இல்லாமல் விற்கப் படும் பொருட்களால் வாடிக்கை யாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப் படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில்  இயந்திரங்களைக் கொண்டு ஆளில் லாத வணிகத்தை நடத்துவதால் இளைஞர்களின் வேலை வாய்ப் புகள் பாதிக்கப்பட்டு நாட்டின்  பொருளாதாரம் வீழ்ச்சியடை கிறது.ஆகவே ஆன்லைன்வர்த்த கத்தை தடை செய்ய  வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் நாடு முழுவதும் 25 கோடி பேரும், தமிழகத்தில் 37 லட்சம் பேரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்  கார்ப்பரேட்களுக்கு மட்டும் ஆதர வாக ஆன்லைன் வர்த்தகம் உள்ளது.  சிறு, குறு வணிக தொழில் செய்வோ ருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை நிர்வாகிகள் உள் ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்