tamilnadu

img

ஏ.வி.சி கல்லூரி தமிழாய்வுத் துறை நிகழ்ச்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பின் சார்பாகப் பிற்காலச்சோழர் வரலாற்றுத் தொடர் சொற்பொழிவு  நடைபெற்றது.   தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு முன்னிலை வகித்துப் பேசினார். உதவிப் பேராசிரியர் முனைவர் சு.இரமேஷ் தலைமையுரை வழங்கினார். ஏ.வி.சி.கல்லூரி, வரலாற்றுத் துறை, உதவிப் பேராசிரியர் வெ.இராஜேந்திரன், பிற்காலச் சோழர் வரலாற்றுக் கருத்தியல்கள் என்னும் தலைப்பில் தமிழகத்தின் பொற்காலமாக அமைந்த பிற்காலச்சோழர்களின் விசயாலயன் காலம் தொடங்கி மூன்றாம் இராசேந்திரன் வரையிலான 430 ஆண்டுகளில் 29 சோழர்களின் ஆட்சியில் நடைபெற்ற அரசுகளின் நீதி, நிதி, நீர் நிர்வாக மேலாண்மைச் சிறப்பு உள்ளிட்டவை எடுத்துரைத்து, மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  முன்னதாக நிகழ்ச்சியில் மாணவர் அ. அன்புநிதி வரவேற்றார். உ. விக்னேஷ் நன்றி கூறினார். பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திண்ணை அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சியாமளா செகதீஸ்வரி செய்திருந்தார்.

;