tamilnadu

img

குவிந்துகிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

அடிப்படை வசதிகள் செய்துதர  பொதுமக்கள் வலியுறுத்தல்

 தருமபுரி, ஜன. 10- பையர்நத்தம் கிராமத்தில் குவிந்து கிடக் கும் குப்பையை அகற்றவேண்டும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே பையர்நத்தம் கிராமம், அம்பேத்த கர் நகர், மாரியம்மன்கோயில் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 மாதங்களாக குப்பை தொட்டியில் உள்ள குப்பையை அப் புறப்படுத்தாமல் உள்ளது. மேலும், சாக் கடை கால்வாய் சுத்தம் செய்யாமல் தேங்கி யுள்ளதால் கொசுகள் உற்பத்தியாகி சுகா தார சீர்கேடு ஏற்படுத்துகின்றது. இந்நிலையில், கடந்த 10,வருடங்க ளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிண றானது சிதிலமடைந்து குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.  எனவே, பையர்நத்தம், அம்பேத்கர் நகர், மாரியம்மன்கோயில் ஆகிய பகுதிகளில் குடி நீர்,கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தரக்கோரி அப்ப குதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.