திருப்பூர், டிச. 5 – மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத் துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத் தாருக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் பி.என்.ரோடு போயம் பாளையம் பிரிவில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள், பொரு ளாளர் ஆ.சிகாமணி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சதீஸ்குமார், நிர்வாகிகள் செல்வ குமார், ராஜாமணி, கதிர், தன்ராஜ், இம்ரான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கலியபெருமாள்,சந்திரன் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பாண்டியன், மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.