அன்னூர், நவ. 24- அன்னூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீக்கதிர் ஆயிரம் பிரதிகளை விற்பனை செய் தனர். அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம், செந்தாம்பாளையம், குன்னத்தூர், ஒட்டர் பாளையம், அவி நாசி சாலை, கூத்தாண்டவர் கோவில் வீதி, சிஎஸ்ஐ வீதி, அன்னூர் கடை வீதி, அன்னூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் கள் 50க்கும் மேற்பட்டோர் நபர்கள் தீக்க திர் சிறப்பு விற்பனையில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், வாலிபர் சங்கத்தினர், கட்சி உறுப்பினர்கள் உள்ட்ட பலர் கலந்து கொண்டு 1000 பிரதிகளை விற்பனை செய்தனர்.