tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

எடியூரப்பாவை அவமானம்  செய்வதா?
பெங்களூரு:

கர்நாடக பாஜக
முதல்வர் எடியூரப்பாவை, பிரதமர் மோடி சந்திக்க மறுத்து வருவதற்கு, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடி கர்நாடக முதல்வரைச் சந்திக்க மறுத்துள்ளார். அதுவும் வெள்ளத்துக்குப் பிறகான அவசரக் காலத்தில் கூட அவர் முதல்வரைச் சந்திக்க மறுப்பது எடியூரப்பாவுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இது கர்நாடக மாநிலத்துக்கு விளைவிக்கப்படும் அநீதி.சுய மரியாதை உள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அறங்காவலர்
திருப்பதி:

‘மணல் மாபியா’ என்று கூறப்படும் சேகர் ரெட்டி, 2 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருப்பதி தேவஸ்தான வாரிய பதவி பறிபோனது. சேகர் ரெட்டி மீது, தற்போதும் அமலாக்கத்துறை வழக்குகள் உட்பட இன்னும் சிலவழக்குகள் நிலுவை யில் உள்ளன. எனினும் அவற்றைப் பொரு ட்படுத்தாமல் சேகர் ரெட்டியை, மீண்டும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவிக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

உ.பி. மாநில மதிய உணவில் ஊழல்!
லக்னோ:

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கன்னாஜ், பிரதாப்கர் ஆகிய மாவட்டங்களில், மதிய உணவுத் திட்டத்திற்கான தானி யங்கள் தனியாருக்கு விற்கப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில், தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்155 மூட்டை தானியங்களை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், மொத்த வியாபாரியை கைது செய்துள்ளனர். மேலும் ஊழலில் ஈடுபட்டதாக 17 அங்கன்வாடி பணியாளர்கள், 4 சிறப்பு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சரிதாநாயர் மனுவுக்கு  ராகுல் பதில்
திருவனந்தபுரம்:

கேரளத்தைச் சேர்ந்த நடிகை சரிதா நாயர்,அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, ராகுல் காந்தியை எதிர்த்து, வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், அமேதியில் சரிதா நாயரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட, வயநாட்டில் மட்டும்தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் சரிதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சரிதா நாயரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.