tamilnadu

img

மேற்குவங்க பாஜக வளர்ச்சிக்கு மம்தாவே காரணம்..!

கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக-வின் திடீர் எழுச்சிக்கு மம்தா பானர்ஜியே காரணம் என்று, அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோமன் மித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

“மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் எழுச்சிக்கு மம்தா பானர்ஜி மட்டுமே காரணம். அவர் அப்பட்டமான சிறுபான்மை பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், பாஜக மேற்கு வங்கத்தில் காலூன்றி இருக்காது’’ என்று சோமன் மித்ரா கூறியுள்ளார்.மேலும், “எதிர்க்கட்சிகளை அகற்றுதல் மற்றும் அந்தக் கட்சிகளின் தலைவர்களை வேட்டையாடுதல் என்ற மம்தாவின் கொள்கைகளும் பாஜக எழுச்சி பெற காரணமாகி இருக்கிறது” என்று தெரி வித்துள்ள சோமன் மித்ரா, “பாஜக வளர்ச்சி தொடர்பான விவகாரத்தில் மற்ற வர்களைக் குற்றம் சாட்டுவதற்கு மம்தா வுக்கு அதிகாரம் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.“ஒரு காலத்தில் காங்கிரசை பலவீனப்படுத்துவதற்காக பாஜக-வை வலுப்படுத்தி யவர்கள், இன்று தனது சொந்தக் கட்சியின் தலைவர்களை பாதுகாக்கவே போராடு கிறார்கள்” என்றும் மம்தாவை மறைமுக மாக சோமன் மித்ரா சாடியுள்ளார்.

மேற்குவங்கத்தில் கடந்த 2014 மக்கள வைத் தேர்தலில், 2 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக, 2019 தேர்தலில் 18 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.