tamilnadu

சாலைகள் வசதி கோரி மக்கள் போராட்டம்: அதிகாரிகள் வாக்குறுதி

கிருஷ்ணகிரி,ஏப்.19-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம் மலை மீதுள்ளது பெட்டமுகிலாளம் ஊரட்சி. இங்கு 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. பழங்குடி, மலைவாழ் மக்கள் தாழ்த்தப்பட்டோர், நரிக்குறவர், குருபர் இன மக்கள் 40 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். தேன், காய்ந்த விரகு சேகரித்தல், பழங்கள், வாசனை திரவியங்கள் சேகரித்தல் ஆடு மாடு வளர்த்தல் உட்பட மலை சார்ந்த தொழில்களே செய்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு செல்ல போதிய அளவு சாலை வசதி கிடையாது. மேலும், அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை.உடல் நலக் குறைவு என்றாலும், பிரசவம் பார்த்துக்கொள்ளவும் மலைக்கு கீழ் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குதான் வரவேண்டும். சாலை வசதியில்லை என்பதால் தொட்டில் போல் கட்டி படுக்க வைத்தே பலர் சேர்ந்து தூக்கிக் கொண்டு வருவார்கள். இப்படி கொண்டு வருவதற்குள்ளாகவே பலர் இறந்து போவதும் உண்டு. வசதிகள் ஏதும் இல்லாத இருட்டே இவர்கள் உலகமாக தொடர்கிறது.இங்கு பெட்ட முகிலாளம் ஊராட்சிக்குட் பட்ட தொட்ட தேவன அள்ளி, கவுனூர், குல்லட்டியில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 850-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.


இங்கும் சாலை வசதி இல்லை. சாலைக்கு பெட்ட முகிலாளம் வரை ஏழு கிலோ மீட்டர் கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை என நடந்தே வரவேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளும் சாலை வசதியும் கேட்டு பல முறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மற்றும் ஊராட்சி தலைவர் , அலுவலர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் அளித்தும் எந்த சிறு வசதியும் . செய்து தரப்படாத தால் தேர்தல் அறிவித்ததும் இந்த மூன்று ஊர்மக்களும் தேர்தலை புறக்கப்பதாக அறிவித்திருந்தனர்.அதன்படி, 500க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் வாக்களிக்க வரவில்லை. இந்த ஊர்களுக்கான வாக்குசாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகாததால் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 மணி நேர பேச்சுவார்த்தையில் வட்டார வளாச்சி அலுவலர், வட்டாட்சியர் காவல் துறையினர் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.உத்திரவாதத்தின் பேரில் அரசு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட் டதால் மூன்று ஊர்மக்களும் வாக்களித்தனர். உறுதியளித்தபடி ஏமாற்றாமல் வாக்களித்த மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை, சுகாதார, மருத்துவ வசதிகளை அலுவலர்கள் விரைவில் செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட க்குழு சார்பில் மாவட்ட ஆட்சியாளருக்கு கோரிக்கை வலியுறுத்ததப்பட்டுள்ளது.

;