tamilnadu

img

நிலவேம்பு குடிநீர் விநியோகம்

உடுமலை, அக். 22- உடுமலை பாரதியார் நினைவு நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்க ளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. உடுமலை கிளை நூலகம் (எண்.2) உடுமலை அரசு சித்த மருத்துவ பிரிவுடன் இணைந்து நிலவேம்பு குடி நீர் வழங்கும் முகாம் பாரதியார் நினைவு நூற்றாண்டு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. உடுமலை வருவாய் கோட்டாட்சியர் சி.இந்திரவள்ளி முகாமைத் தொடங்கி வைத் தார். தலைமையாசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் முருகன், சித்த மருத்துவர் வி.லட்சுமி பதிராஜ்,  வாச கர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;