tamilnadu

கிருஷ்ணகிரி, புதுச்சேரி முக்கிய செய்திகள்

அஞ்செட்டி ஊராட்சியில் சிபிஎம் வெற்றி

கிருஷ்ணகிரி, ஜன. 4- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள அஞ்செட்டி ஊராட்சி பையில்காடு 6ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முனிரத்தனம்மா காவேரி வெற்றி பெற்றார்.
 

புதுவையில் ஜன.20ல் திருவள்ளுவர் சிலை திறப்பு

புதுச்சேரி, ஜன. 4- புதுவை தமிழ்ச்சங்கத்தில் ஜனவரி 20 ஆம் தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து தலைவர் முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை வெங்கடா நகரில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் தமிழ் மற்றும் தமிழர்களின் அடையாளமாக திகழும் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட உள்ளது. நான்கரை அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பைபரால் செய்யப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் திறப்பு விழா வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது. விழவில் முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சிறப்பு விருந்தினராக விஐடியின் துணைவேந்தர் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக விஐடியின் துணைவேந்தர் விஸ்வநாதன் கலந்து கொள்கிறார்.  இவ்வாறு அவர் கூறினார்.

காலமானார்

 கிருஷ்ணகிரி, ஜன. 4- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் நொகனூர் மார்க்சிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் வெங்கடேசின் தாயார் ராமக்கா (80) சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

;