tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி, டிச.29- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மிட்டப்பள்ளி ஊராட்சி 3 வது வார்டு உறுப்பினராக சாவி சின்னத்தில் தங்கபாலு வும், ஏ.பூசை 4வது வார்டு காமராஜ் நகரில் சாவி சின்னத்திலும், காரப்பட்டு ஊராட்சி கொட்டிக்குட்டைகாடு 9 வது வார்டில் ஆ.சுரேஷ் எம்சிஎஸ் சாவி சின்னத்திலும், கோவிந்தாபுரம் ஊராட்சியில் கோவிந்தாபுரம் 7 வது வார்டில் ராஜேந்திரன் சீப்பு சின்னத்திலும் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருப்பதி, செயலாளர்  பெரியசாமி, துணைத் தலைவர் பழனி ஆகியோர் உள்ளிட்டோர் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

;