districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, ஜூலை 24 - மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்த் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட 2வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 24) திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அரசு ஆணைப்படி மாற்றுத் திறனாளி குடும்பங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைவருக்கும் ஏஏஒய் குடும்ப அட்டை வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகைய 3 ஆயிரம் ரூபாயாகவும், கடும் ஊன முற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாக வும் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் டி.சுரேந்திரன் தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் தி.சிவக் குமார் வரவேற்றார். ஆர்.சக்தி வேல் கொடியேற்றினார். மாநிலச் செயலாளர் தோ.வில்சன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி வேலை அறிக்கை யும், பொருளாளர் என்.மனோகரன் வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சமூக செயற்பாட்டாளர்கள் எம்.சுஜாதா, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் த.குணசேகரன், மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய சங்கத் தலைவர் எம்.பழனி, சமூக செயற்பாட்டாளர் கவிதா கஜேந்திரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி நிறைவுரையாற்றினார்.
நிர்வாகிகள் 
மாவட்டத் தலைவராக டி.சுரேந்திரன், செயலாளராக எஸ்.மனோன்மணி, பொருளாளராக என்.மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக பேரணி பொதுக்கூட்டம் நடை பெற்றது. இ்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநில துணைச் செயலாளர்கள் தோ.வில்சன், எஸ்.கே.மாரியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.