districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

விருதுநகர், பிப்.9- விருதுநகர் அருகே மாற்றுத்திறனாளி களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்  தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர் மகளிர் நலக் கூடத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் என்.டி.நட ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ் வரவேற்றார். அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநிலத் தலைவர் டி.வில்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடி வில் மாவட்ட பொருளாளர் பி.அன்புச்செல்வன் நன்றி கூறினார். மேலும் இதில், மாவட்ட நிர்வாகிகள் கே. ஆரோக்கியராஜ், ஜி.தர்மலிங்கம், எஸ்.மாரீஸ்வரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.