தோனி மீதான விமர்சனங்கள் ஆச்சரியமானது
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தோனி சொதப்பினார். மற்ற ஆட்டங்களில் மிகச் சிறப்பாகவே விளையாடினார். இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். தோனியின் ஆட்டம் பெரும்பாலும் அணியின் நலனுக்காகவே இருக்கும். அவர் ஒரு ஆட்டத்தில் சொதப்பினால் கூட கடுமையான விமர்சனங்கள் அதிகமாக எழுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்
சஞ்சய் பாங்கர் அளித்த பேட்டியிலிருந்து...