இந்தியா அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விளையாட்டு உலகின் சிறந்த தருணத்திற்கான விருது வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. லாரியஸ் விருதுகள் 2020 விழா, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. அதில் விளையாட்டு உலகின் சிறந்த தருணத்திற்கான விருது, சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதும், வீரர்கள் சச்சினை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தை வலம் வந்து கொண்டாடப்பட்டதை, கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. இந்நிலையில், அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை வழங்கினார்.