tamilnadu

img

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்த ஆஸ்திரேலியா 454 ரன்களில் ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 251 ரன்னில் ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதை அடுத்து ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. டேவிட் வார்னர் சதமடித்தார். லாபஸ்சாக்னே அரை சதமடித்தார். இதனால், ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டேவிட் வார்னர் 111 ரன்னுடனும், லாபஸ்சாக்னே 59 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 47.5வது ஓவரில் நியூசிலாந்து அணி 136 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.