tamilnadu

img

பிபா வளர்ச்சி தலைவராக ஆர்சென் வெங்கர் நியமனம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) வளர்ச்சி தலைவராக இங்கிலிஷ் பிரீமியர் லீக் தொடரின் நட்சத்திர அணியான அர்சனல் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், மொனாக்கோ அணியின் தற்போதைய பயிற்சியாளரான  ஆர்சென் வெங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா கண்டத்தின் சக்தி வாய்ந்த கிளப் பயிற்சியாளரான ஆர்சென் வெங்கர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அர்சனல் அணிக்கு 22 ஆண்டுகள் (1996-2018) பயிற்சியாளராக இருந்த ஆர்சென் 3 முறை பிரீமியர் லீக் பட்டம், 7 முறை எப்.ஏ. பட்டம், 7 முறை ஷீல்டு பட்டம் பெற்றுத் தந்த பெருமைக்கு உரியவர். பயிற்சியில் சொதப்பல் மற்றும் நிர்வாக பிரச்சனை காரணமாக 2018-ஆம் ஆண்டு அர்சனல் அணியிலிருந்து விலகினார். தற்போது ஐரோப்பா கண்டத்தின் மொனோக்கோ நாட்டின் தேசிய அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.   அர்சனல் அணிக்காக இளையோர் வளர்ச்சியில் அதிக பங்களிப்பு ஆற்றியதால், பிபா நியமித்த வளர்ச்சி தலைவர் பொறுப்பைச் சிறந்த வழியில் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.