tamilnadu

img

எஸ்.பி.ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவன பிரீமிய வசூல் அதிகரிப்பு

சென்னை, ஜன. 27- எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறு வனத்தின் புதிய வணிக பிரீமிய வசூல் 2019 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத  காலத்தில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட ஆரோக்கியமாக 35  விழுக்காடு உயர்ந்து ரூ. 12,787 கோடி யாக அதிகரித்துள்ளது.  முந்தைய 2018 ஆம் ஆண்டின் இதே காலத்தில் இது ரூ. 9,470 கோடியாக இருந்தது. இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவ னம், பாதுகாப்பு  பாலிசிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகை யில், பாதுகாப்பு பாலிசிகள் மூலமான புதிய  வணிக பிரீமிய வசூல், 2019 டிசம்பர் உடன்  முடிந்த ஒன்பது மாத காலத்தில் ரூ.1,444 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட இது 37 விழுக்காடு அதிகமாகும். அந்தக் காலத்தில்  இது ரூ. 1,056 கோடியாக இருந்தது.   

;