tamilnadu

img

அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக சிஐடியு வலியுறுத்தல்

கல்பாக்கம், ஜன. 19- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பகுதிகளில் 30 ஆண்டுக்காலமாக பணிசெய்திடும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என சிஐடியு வலி யுறுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கதிர் வீச்சு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பணி களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், சிஐடியு அகில இந்திய மாநாட்டை விளக்கும் வகையி லும் கல்பாக்கம் அணு சக்தி ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் சனி யன்று புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் க.பழனி சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கல்பாக்கம் சுற்றுவட்டார கிராம இளைஞர்களுக்கு நிரந்த வேலையில்  முன்னு ரிமை வழங்க வேண்டும்,  நகரியை தூய்மைப்  பணி, மருத்துவமனை சார்ந்த பணிகள், மின் விநியோகம், குடிநீர் விநியோகம், பராமரிப்பு பணிகள்  போன்ற நிரந்தர தொடர்ச்சியான  பணிகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்திட வேண்டும், தற்காலிக பணிகளில் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் 21 ஆயிரம் வழங்கிட வேண்டும்,  ஒப்பந்த ஊழியர்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட உரிமைகள் சலுகைகள்  உறுதிப் படுத்த வேண்டும், 30 ஆண்டுகளுக்கு  மேலா கக் கதிர் வீச்சு  பணிகளில்  தொடர்ந்து பணி யாற்றும், தொழிலாளர்களை  நிரந்தரப்ப டுத்த வேண்டும், அவர்களை 60 வயது வரை  பணி செய்திட அனுமதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.பகத்சிங் தாஸ், மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பாளர் எம்.கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார், வட்டக்குழு உறுப்பினர் அழகேசன்,  உள்ளிட்ட பலர்  பேசினர், கூட்டத்தை நிறைவு செய்து சிஐடியு  மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசினார்.