tamilnadu

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி முக்கிய செய்திகள்

காவல்துறை சார்பில் சிறுவர் மன்ற விழா
காஞ்சிபுரம்,ஜன. 27- காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களி லும் பாய்ஸ் கிளப் என்ற சிறுவர் மன்றங்கள் துவக்கப்பட்டுள்  ளது. மாணவ மாணவிகள் தவறான பழக்கவழக்கங்களுக்கு செல்வதை தடுக்கும் பொருட்டு இந்த பாய்ஸ் கிளப் துவங்கப்  பட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் இணைந்து கொள்ளலாம். சிறுவர்கள் தங்களின் பிரச்சனை களை தீர்த்துக் கொள்ள இந்த பாய்ஸ் கிளப் உதவியாக இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்  வரி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவல்துறையை சார்ந்த  அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஏலச்சீட்டு நடத்தி மோசடி
திருவண்ணாமலை,ஜன.27- திருவண்ணாமலை நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். திங்களன்று (ஜன.27) ஷகிலாபீ, காசிம் என்பவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:- திருவண்ணாமலை 3 ஆவது புதுத்தெருவை சேர்ந்த ஷேக்ரசூல் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதில் 3 லட்ச  ரூபாய் நாங்கள் சீட்டு கட்டினோம். சீட்டு காலம் முடிந்து 18 மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை எங்களுக்கு சீட்டு  பணம் தரவில்லை. அவரிடம் சென்று பணம் கேட்டால், எல்லோ ருக்கும் சீட்டுபணம் தரும் பழக்கம் எங்களுக்கு இல்லை. இனி மேல் பணம் கேட்டு வந்தால் கொலை செய்துவிடுவேன் என  மிரட்டல் விடுக்கிறார். எனவே, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த  பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  

பிப்.12ல் புதுச்சேரி பேரவை கூடுகிறது
புதுச்சேரி,ஜன.27- புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம்  12 ஆம் தேதி காலை 9 மணிக்கு கூட்டப்படுகிறது. இதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப் பேரவை செயலாளர் வின்சென்ட்ராயர் அறிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரளா, ராஜஸ்  தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இத்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்  சட்டமன்றம் கூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

;