திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட 79, 80, 81 ஆகிய வட்டங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது தலைவர்கள் போன்று சிறுவர்கள் வேடமணிந்திருந்தனர். இதில் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, தொகுதி செயலாளர்கள் ஜோசப்சாமுவேல், டி.எஸ்.பி.ராஜகோபால், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் சு.பால்சாமி, சு.லெனின்சுந்தர், கே.ரவிச்சந்திரன், பாக்கியம்பிள்ளை, வீரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், தொகுதி செயலாளர் மனோகரன், மதிமுக தொகுதி பொறுப்பாளர் தாமோதரன், விசிக தொகுதி செயலாளர் இப்ராகிம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.