tamilnadu

கொரோனா நோயாளிகள் மறியல்

கள்ளக்குறிச்சி. ஜூலை 25-   தியாகதுருகத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் உள்ள தனியார் பள்ளியில்  கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப் பட்டுள்ளது. இதில் சுமார் 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், மருத்துவர்கள் முறை யாக வருவதில்லை என்றும், தரமான உணவு  வழங்கப்படாமல் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக அங்குள்ளவர்கள் கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா அந்த முகாமை நேரில் ஆய்வு  செய்து குறைபாடுகளை சரிசெய்ய உத்தர விட்டிருந்தார்.  இந்நிலையில் சிலர் தாங்கள்  முகாமிற்கு வந்து 15 நாட்கள் கடந்த பிறகும்  வீட்டுக்கு அனுப்பப்படாமல் காலதாமதம் செய்வதாகக் கூறி அங்கிருந்த ஊழியர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரே இடத்தில் அதிக நோயாளிகளை தங்க  வைப்பதாகவும், முறையான நடவடிக்கை கோரியும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளி கள் தங்களுக்கு குணமாகி விட்டதால் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக்கூறி  வெள்ளியன்று (ஜூலை 24) மாலை முகாம் கட்டிடத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர முயற்சித்தனர். இவர்களை ஊழியர்கள் தடுத்த நிலை யில் ஆத்திரமடைந்த அவர்கள் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன், மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், சிறப்பு அலுவலர் அனந்தசயனன், தியாகதுருகம் காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் மறிய லில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சனைகளை உடனடி யாக தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் முகாமுக்குத் திரும்பினர்.