tamilnadu

டார்வின் பிறந்த நாளையொட்டி மனித பரிணாமம் கலந்துரையாடல்

கரூர், பிப்.2- டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பரிணா மம் பயிற்சி முகாம், இரண்டு நாளாக நடைபெற்றது. வருகின்ற பிப்.12 ஆம் தேதி டார்வின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார குழு சார்பில் மாநில அளவிலான பரிணாம பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் கரூரை அடுத்த புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. அறிவியல் இயக்கத்தின் பிரச்சாரக் குழு வின் ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா வர வேற்றுப் பேசினார். சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாண்டியன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் ராஜமாணிக்கம் மனித பரி ணாம வளர்ச்சியும், சமூகமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பரிணாமம் குறித்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்து ரையாடல் நடைபெற்றது. குறிப்பாக பரிணாமம் குறித்து உலக அளவில் தனி கவனம் பெற்ற டார்வின் எழுதிய சார்லஸ் டார்வின் மனித இனங்களின் தோற்றம் என்ற நூலைப் பற்றிய கலந்துரையாட லும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.