கடலூர், டிச. 30- உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு முதிய வர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை சந்தித்தனர். கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக திங்கள்கிழ மையன்று 7 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டத் தேர்தலின் போதே முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் எளி மையாக வாக்களிப்பதற்கு போதுமான ஏற்பாடுகளை செய்யாத நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் அதே நிலை தான் நீடித்தது. இதனால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவர்களது உறவினர்க ளின் உதவியை மட்டுமே பெற்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாகனங்களில் அழைத்து வரப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவர்களை உறவினர்கள் தூக்கி வந்து வாக்களிக்கச் செய்த னர். அவர்களை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்படவில்லை. மேலும், சில வாக்குச்சாவடி களில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி உள்ளிட்டவையும் பழுதான நிலையிலேயே கேட்பாரற்று மூலையில் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டது. இதற்காக, மாற்றுத்திறனாளிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்திருந்ததோடு, அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்வதற்கு தன்னார்வ லர்களையும் நியமித்திருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கக் கூடிய வாக்குச்சாவடி களில் அவர்களது சக்கர நாற்காலி வந்துச் செல்லும் வகையில் சரிவு பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த வகையான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும் வகையிலான ஏற்பாடு களும் செய்யப்படாமல் இருந்ததால் அவர்கள் வாக்களிக்கச் செல்வ தில் கடும் சிரமத்தை சந்தித்தனர்.