tamilnadu

img

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய 99 பேருக்கு வாழ்நாள் தடை

சென்னை,ஜன.24- குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்  பாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம்  செய்து உத்தரவிட்டுள்ள டிஎன்பி எஸ்சி, அவர்கள் அனைவரும் வாழ் நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதித்து அதிரடியாக அறி வித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர் போன்ற பதவி களை உள்ளடக்கிய, 9 ஆயிரத்து 398 காலிப்பணியிடங்களுக்கான குரூப் - 4  தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம்  தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவுகள் நவம்பர் 12 ஆம்  தேதி வெளியிடப்பட்டது. அதில் 24 ஆயி ரத்து 260 பேர் தேர்ச்சி பெற்று சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.  இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வ ரம் தேர்வு மையங்களில் தேர்வெழு திய பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்க ளில் பெரும்பாலானோர், தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை அடுத்து, டி.என்.பி.எஸ்.சி விசாரணையில் இறங்கியது.

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்க ளில் தேர்வெழுதியவர்கள் நேரடியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு, சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் விசாரணையும் நடை பெற்றது. இந்நிலையில் 99 தேர்வர்கள்  முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி  செய்யப்பட்டிருப்பதாக டி.என்.பி. எஸ்.சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இடைத்தரகர்களின் ஆலோ சனைப் படி கீழக்கரை மற்றும் ராமேஸ்  வரம் மையங்களை தேர்வு செய்த  99 தேர்வர்கள், இடைத்தரகர்களிட மிருந்து பெற்ற, விடைகளை குறித்த வுடன் சில மணி நேரங்களில் மறை யக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை பயன்படுத்தி, தேர்வின் போது விடைகளை குறித்து விட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் உதவியுடன், 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளை குறித்ததாகவும், பின்னர் அவற்றை அதே விடைத்தாள் கட்டுக்களில் சேர்த்து வைத்ததும் தெரிய வந்துள்ள தாக டி.என்.பி.எஸ்.சி அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுள் 39 பேர் தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களில் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள், கருவூலங்களில் நேரடியாக ஆய்வு செய்ததோடு, தேர்வுப் பணியில் ஈடு பட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, அனைத்து  ஆவணங்களையும் தீவிரமாக ஆய்வு  செய்ததில் முறைகேடுகள் நடைபெற் றது உறுதி செய்யப்பட் டதாகவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த இரு மையங்க ளைத் தவிர்த்து வேறெங்கும் எவ்வித  தவறும் நடைபெறவில்லை என்றும்  உறுதி செய்யப்பட்டுள் ளது. தேர்வா ணைய அறிவிப்புகள், இணையதளம் என பலதளங்க ளிலும் உரிய அறிவு ரைகளை வழங்கியும் ஒருசில தேர்வர்  களே இதுபோன்ற தவறுகளில் ஈடு பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும், தேர்வாணையத்தின் மாண்பை குலைப்பதாக இருப்பதாகவும் டி.என். பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட 99 தேர்வர் களையும் தகுதிநீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும்  தரவரிசைப்பட்டியலில் 39 இடங்க ளில் வந்தவர்களுக்கு பதில், தகுதி யான வேறு 39 பேரை தேர்வு செய்து  சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனு மதித்து உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முறை கேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் மற்றும்  இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்வ தற்காக, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படை யில் தகுதியான தேர்வர்களுக்கு உட னடியாக கலந்தாய்வு நடத்தப்ப டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறி வித்துள்ளது. இனிவரும் காலங்களில் எவ்வித தவறுகளும் நிகழாத வண்ணம், தேர்வு நடைபெறும் முறை யில் தகுந்த சீர்த்திருத் தங்கள் விரைந்து  மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்வா ணையத்தின் நடவடிக்கைகள் ஒளிவு மறைவின்றி நடைபெறுவதாகவும், தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிபிசிஐடி  விசாரணை

குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்த குமார், தமிழக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட் டுள்ள சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா தலைமையி லான அதிகாரிகள் குழுவினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசார ணையை துவங்கியுள்ளனர். கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்ளிட்ட  12 பேரிடம் சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று  வருகிறது. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களிடமும், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இதனிடையே விசாரணைக்கு ஆஜராகியுள்ள தேர்வர்கள் அளித்த தகவலின் அடிப்படை யில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணிபுரி யும் ஓட்டுநர்கள் இருவர், அவர்களது நண்பரான ஆவடியை சேர்ந்த ஓட்டுநர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இதனிடையே போலி ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை பயன்படுத்தியும் முறைகேடுகள் நடை பெற்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

;