அரசு உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
சென்னை, ஜன.25- தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள் ளன. இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மக ளான 8 வயது சிறுமி, கூட்டு பாலி யல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூர மாகப் படுகொலை செய்யப்பட்டுள் ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சி யையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்தப் படுகொலை சம் பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசியை சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருப்பதும், குடிபோதைக்கு பலரும் அடிமையாகி வருவதும், தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற் பனை செய்யப்படுவதும் குற்றங் கள் நடைபெறுவதற்கும், அதிகரிப்ப தற்கும் முக்கிய காரணமாக உள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் மீதான குற்றங்கள் 250% அதிகரிப்பு
தமிழ்நாட்டில் பெண் குழந்தைக ள் மீதான பாலியல் வன்புணர்வு தாக்கு தல்கள் அதிகரித்து வருகின்றன. சமீ பத்தில் வெளிவந்துள்ள தேசிய குற்றப் பதிவு ஆணைய அறிக்கை, தமிழ் நாட்டில் குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறைகள் கடந்த ஐந்தாண்டு களில் 250 சதவீதம் அதிகரித்துள்ள தாக அதிர்ச்சி தகவலை வெளி யிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இத்தகைய குற்ற எண்ணிக்கை தேசிய சராசரியை விட இரட்டிப்பாக அதி கரித்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. மேலும், அதிகமான பெண் குழந்தைகள் வணிக ரீதியாகக் கடத்தப்படுவதும் நடந்து கொண்டுள்ளது.
மேற்கண்ட விபரங்கள் தமிழ் நாட்டில் பெண் குழந்தைகள் பாது காப்பற்ற சூழ்நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. அதிகரித்து வரும் போதைப்பழக்கம், வலை தளங்களில் ஆபாச படங்கள் ஒளி பரப்பு போன்றவற்றால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கொடு மைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்ட போதிலும் நிலைமையில் மாற்ற மில்லை என்பது வேதனைக்குரியது. மறுபக்கம், இத்தகைய கொடுமை களைத் தடுப்பதற்கு உரிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத தும், பாலியல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதும் இதற்கான காரணிகளாக இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட குழந்தை இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க வெளியே சென்ற போது தான் இக்கொடுமை நடந்துள்ளது. அப்பகுதி யில் ஒரே ஒரு கழிப்பறை கூட இல்லை. தூய்மை பாரதம் என்பதெல்லாம் கண்துடைப்பு தான். இவற்றை யெல்லாம் செய்யாத அரசும் குற்றவாளியே.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கொங்கலாபுரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ள குழந்தையின் பெற்றோருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப்பகுதிகளிலும் மின் விளக்கு மற்றும் தண்ணீர் வசதி யோடு கூடிய கழிப்பறைகள் போது மான எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும். அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட சட்டரீதி யான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அடுத்த நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதுகுறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும். மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு இயக்கத்தை அனைத்து சமூக அக்கறையுள்ள அமைப்புகளும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரூ.25லட்சம் நிவாரணம் வழங்குக!
சிவகாசி கொங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை திடீரென காணாமல் போனார். இந்நிலையில், சிறுமி அருகிலுள்ள முட்புதர் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். உடற்கூராய்வைத் தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிறுமி கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மோஜாம் அலி என்பவரை மட்டும் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். உடற்கூராய்வு முடிவின் அறிக்கையின் அடிப்படையில், சிறுமியின் மரணத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத் ஆகியோர் தலைமை வகித்தனர். பி.மங்கம்மாள் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி பேசினர். போராட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் கௌவரத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தெய்வானை ஆகியோர் பேசினர். வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.ஜெயந்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பாண்டீஸ்வரன், காயத்ரி, நகர் தலைவர் பி.கணேசன், ஒன்றியத் தலைவர் எம்.பிரகாஷ், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.கோமதி, மாவட்ட நிர்வாகிகள் ரேணுகாதேவி, சஞ்சீவி நாச்சியார், ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.