tamilnadu

img

தீபாவளிக்கான சிறப்பு ரயில் அறிவிப்பில் தாமதம்

சென்னை, அக். 15- தீபாவளிப் பண்டிகையை யொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு விரை வில் வெளியாகும் என தென்னக  ரயில்வே அதிகாரி தெரி வித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்க ளுக்காக, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப டுவதை போல், தென்னக ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்  கப்படும். தீபாவளிக்காக செய்யப் படும் வழக்கமான ரயில் முன்  பதிவு 120 நாட்களுக்கு முன்பு  தொடங்குவதோடு, 2 வாரங்க ளுக்கு முன்பு சிறப்பு ரயில்க ளுக்கான அறிவிப்பு வெளி யிடப்படுவது வழக்கம். அதன்படி 120 நாட்களுக்கு முன்பு  தொடங்கப்பட்ட ரயில் முன்பதிவு முடிவடைந்த நிலையில், அதில் முன்பதிவு செய்யாதவர்கள் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் 27ஆம் தேதி கொண்டா டப்படும் தீபாவளிக்கு இன்னும் 12  நாட்களே உள்ள நிலையில், தற்போது வரை சிறப்பு ரயில்க ளுக்கான அறிவிப்பு வெளியாக வில்லை.